ராஜபாளையம், பிப்.21. ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் சஞ்சீவி மலை அடிவாரத்தில் ராமசுப்பிரமணியன் என்பவர் வீடு கட்டியுள்ளார். வீடு ஒதுக்குப்புறமாக இருப்பதால் இவர் வீட்டை பூட்டி அருகில் உள்ள ஒரு பக்கத்து தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவரது வீடு பூட்டி இருப்பதை அறிந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து லேப்டாப், கம்ப்யூட்டர், பேட்டரி, இன்வெர்ட்டர் உள்பட ரூ.20,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து ராமசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டது ஆவரம்பட்டி தெருவை சேர்ந்த பால்பாண்டி(21,) ஆவரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மற்றொரு பால்பாண்டி(18), ஆவரம்பட்டி ஒத்தப்பட்டி தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி(32) என தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். திருடு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.