ராஜபாளையம், ஆக.26: ராஜபாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மீனாட்சியாபுரம், கல்லுப்பட்டி, அருள்புத்தூர், பஞ்சம்பட்டி போன்ற கிராமங்களுக்கு தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை அமைக்கப்பட்டது. இக்கடைகள் அனைத்தையும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களான சீனி, அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் காமராஜர் 122வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில் நியாய விலைக்கடை வட்ட வழங்கல் அலுவலர் ஜெயலட்சுமி, கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆரோக்கியசாமி, வெள்ளையம்மாள், கிளைச் செயலாளர்கள். கழக நிர்வாகிகள், கபடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.