ராஜபாளையம், ஆக.31: குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி கற்பகவள்ளி(24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் குடிபோதையில் தகராறு செய்த இரண்டு பேரை தட்டிக் கேட்டாராம். இதனால் இருவரும் கற்பகவள்ளி மீது முன்விரோதம் கொண்டிருந்தனர். இரு தினங்களுக்கு முன்பு நேதாஜி நகரில் கற்பகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஏழு பேர் கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் கற்பகவள்ளியின் கணவர் சிவகுமார், சிவகுமாரின் தந்தை முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் கற்பகவள்ளி கொடுத்த புகாரியின்பேரி ராமராஜ், சக்தி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.