ராஜபாளையம், ஜூன் 7: ராஜபாளையம் நகர் சம்மந்தபுரம் மற்றும் மலையடிப்பட்டி பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .
அதை தொடர்ந்து ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, திமுக நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.