ராசிபுரம்:ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் ஓ.செளதாபுரம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, ஓ.செளதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், சுரபி ரகம் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5,099க்கும், அதிகபட்சமாக ரூ.6,635க்கும் ஏலம் போனது. ரூ.2 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.