நாமக்கல் பிப்.21: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 1ம் தேதி காலை 9 முதல் 3 வரை பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது. முகாமில் 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, செவிலியர் பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால், விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரத்துடன் கல்விச் சான்று, ஆதார் அட்டையை இணைத்து அதற்காக வெளியிடப்பட்டுள்ள இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாம்
0