திருப்பூர், ஆக.18: திருப்பூர்-அவிநாசி ரோடு ராக்கியாபாளையம், உமையஞ்செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் புள்ளி மான்கள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இந்நிலையில் உமையஞ்செட்டிபாளையம் ரோட்டில் உள்ள செட்டித்தோட்டம் வனப்பகுதியில் புள்ளிமான் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புள்ளிமானை கைபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 வயதுடைய ஆண் புள்ளி மான் என்பதும், தெரு நாய்கள் கடித்ததில் இறந்து இருப்பதும், மான் இறந்து 2 நாட்கள் இருக்கக்கூடும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து புள்ளி மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.