செய்முறை:ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுடன் நன்கு மசித்து அரைத்த வாழைப்பழத்தைச் சேர்க்கவும். போதுமான தண்ணீர், பால், தேன், பொடித்த பட்டையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். வெண்ணெயை உருக்கி கரைத்த மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லை சூடு செய்து சுமார் ஒரு கரண்டி மாவைச் சேர்க்கவும். ஊற்றிய மாவை லேசாகப் பரப்பி விடவும். பொடியாக நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி, வால்நட்டை ஊற்றிய மாவின் மேல் சேர்க்கவும். போதுமான எண்ணெயைச் சேர்த்து, இருபுறமும் பேன் கேக்கைத் திருப்பிப் போட்டு, கருகாமல் ப்ரவுன் கலரில் சுட்டு எடுக்கவும். குறிப்பு:* தோசைக்கல் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் சரியாக வரும். * வால்நட் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. * வாழைப்பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும்.