தர்மபுரி. ஆக.21: தர்மபுரி விருபாட்சிபுரம், உடுப்பி புத்திகே மடத்தின் கிளையில், ராகவேந்திர சுவாமியின் 353வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ராகவேந்திர சுவாமிக்கு பூர்வ ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, சீனிவாசன், கிருஷ்ணன், நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
ராகவேந்திரர் ஆராதனை விழா
previous post