தர்மபுரி, ஜூலை 5: தர்மபுரி ரயில்வே பாதுகாப்புபடை மற்றும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில், ரயில்வே பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தர்மபுரி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தோஷ் காவோன்கர் தலைமை வகித்தார். ரயில் பாதைகளில் நடப்பது அல்லது அத்துமீறி நுழைதல், தண்டவாளத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், தற்கொலை முயற்சிகள் மற்றும் தண்டவாளங்களில் கற்களை வைப்பது அல்லது ரயில்கள் மீது கற்களை எறிவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற குற்றங்களுக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் விபத்து இறப்புகள் மற்றும் விபத்துகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
0