விக்கிரவாண்டி, செப்.2: விக்கிரவாண்டி அடுத்துள்ள சாமியாடி குச்சிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் மோதி உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதாக திண்டிவனம் ரயில்வே ஆர்.பி.எப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (55) விவசாயி என்பதும், இவருக்கு திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.