மதுரை, ஜூன் 7: மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை ரயில்வே குடியிருப்பில் நகர்ப்புறத்தில் குறைந்த இடத்தில் அடர்த்தியான பசுமை காடுகளை அமைக்கும் ஜப்பானின் மியாவாகி முறைப்படி 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வத்சவா, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என். ராவ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நட்டனர்.
மேலும் நீர் சேமிப்பு, மரம் காப்பது, வாழும் ஒரே பூமியை காப்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தி மதுரை ரயில் நிலையத்தில் மவுன மொழி நாடகம் நடத்தப்பட்டது. இதன் மூலம் ரயில் பயணிகள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.