உளுந்தூர்பேட்டை, ஆக. 15: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேவாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜோதிமணி (32). இவர் சென்னையில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தேனிக்கு சென்றுள்ளார். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து ஜோதிமணி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த ஜோதிமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ரயிலில் சென்றவர் தவறி விழுந்து சாவு
previous post