சேலம், ஜூன் 20: ஒடிசா, ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு, கேரளாவிற்கு வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்க சேலம் உட்கோட்ட ரயில்வேயில் சிறப்பு எஸ்ஐ அய்யாத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படை போலீசார், ஜோலார்பேட்டையில் இருந்து சேலம், ஈரோடு வரை குறிப்பிட்ட ரயில்களில் ஏறி தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை, ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து நின்ற ஹாத்தியா-பெங்களூரு எக்ஸ்பிரசில் முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் ஏறி தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, கழிவறை அருகில் 2 பேக், ஒரு சாக்குப்பை கேட்பாரற்று கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்ட 15பண்டல்களில் 35 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கடத்தி வந்த மர்மநபர்கள், ரயிலில் இருந்து இறங்கி தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 35 கிலோ கஞ்சாவையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரயிலில் கடத்தி வரப்பட்ட 35 கிலோ கஞ்சா பறிமுதல்
0
previous post