மானாமதுரை, மே 24: மானாமதுரை ரயில்வே எஸ்ஐ தனுஷ்கோடி தலைமையில் போலீசார் ராஜேஸ்கண்ணன, சரவணன், பரணி செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை மானாமதுரை ரயில் நிலையத்திற்கு வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனை செய்தனர். அப்போது இஞ்சினில் இருந்து 2வது பொது பெட்டியின் பாத்ரூம் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அந்த பார்சலில் சுமார் 1200 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது. கஞ்சாவை கைப்பற்றி விசாரணை செய்து சிவகங்கை மாவட்ட போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.