திண்டுக்கல், செப்.3: திண்டுக்கல்லில் நேற்று பெண் மயில், ரயிலில் அடிபட்டு பரிதபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின் என்ஜினில், நேற்று பெண் மயில் அடிபட்டு, ரயில்வே பிளாட்பாரத்தில் இறந்த நிலையில் கிடந்தது. ரயில்வே போலீசார், இறந்த பெண் மயிலின் உடலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.