கோவை, ஜூலை 17: தமிழ்நாட்டில் ரத்த சோகை பாதிப்பில் இளம் சிறார் குறிப்பாக அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குடல் புழு நீக்கம், தன் சுத்தம், கை கழுவுதல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் மாநில அளவில் விழிப்புணர்வு பணி நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் ரத்த சோகை பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மாநில அளவில் 20 மாவட்டங்களில் அங்கன்வாடியில் படிக்கும் சிறார்களுக்கு 57 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. போஷான் அபியான் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெற்று விழிப்புணர்வு பணிகளை துரிதமாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், ரத்த சோகை தடுக்க பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சத்தான உணவு, முருங்கை கீரை உணவு, தானியங்கள், காய்கறிகள் அதிகளவில் உணவில் சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.