திருப்பூர், ஆக. 19: திருப்பூர் மாநகராட்சி நல்லூர் பகுதி 49வது வட்டத்தில் உள்ள வள்ளியம்மை நகர் பள்ளிவாசல், இல்முன் நாபியா மஸ்ஜித் சேவைக்குழு மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், டிகேடி. நாகராசன், அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி கழகச் செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, உசேன், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்டக் கழகச் செயலாளர் மனோகரன் பத்ரன் மற்றும் திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், சேவைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சேகரிக்கப்பட்ட ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.