மதுரை, செப். 5: ரசிகர்களை நம்பி நாட்டை ஆளலாம் என நினைக்கக் கூடாது என நடிகர் விஜய்க்கு செல்லூர் ராஜூ ஆலோசனை கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவு பெற்றால் இன்னும் 40 வருடங்களுக்கு மதுரை மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைத்துக் கொண்டிருக்கும். அந்த பணியை விரைவுப்படுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். நடிகர் விஜய், ரசிகர்களை நம்பி கட்சி துவங்கினால் நாட்டை ஆளலாம் என்று நினைக்கக்கூடாது. மக்கள் ஆதரவும் வேண்டும். எம்ஜிஆருக்கு ரசிகர்களுடன் மக்கள் ஆதரவும் இருந்ததால்தான் அவர் நாட்டை ஆண்டார்’’ என்று கூறினார்.
ரசிகர்களை நம்பி நாட்டை ஆளலாம் என நினைக்கக் கூடாது நடிகர் விஜய்க்கு செல்லூர் ராஜூ அட்வைஸ்
previous post