ஈரோடு, மே 19: ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்விநிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன் மாதவராஜன் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அதற்காக பாடுபட்ட முதல்வர், தமிழ் ஆசிரியர் பிரபு, முதலிடம் பெற்ற மாணவனைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் பள்ளியின் தலைவர் சின்னச்சாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் மற்றும் உதவித்தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, இணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளர் நாகராஜன், முன்னாள் பொருளாளர் அண்ணமார் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் சர்வலிங்கம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முதல்வர் நதியா அரவிந்தன் உள்ளிட்டோர் மாணவனுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.