ராமேஸ்வரம், ஆக.15: ராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் 2024-2025ம் ஆண்டுக்கான தலைவர் தேர்தல் நேற்று ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. தேர்தலில் பாஸ்கரன் மற்றும் மகேந்திரன் இருவரும் போட்டியிட்டனர். தேர்தல் பணிக் குழுவினர் வெள்ளைச்சாமி, முத்துகிருஷ்ணன், சரவணன், கார்த்திக், ஹரிகரன் ஆகியோர் தலைமையில் சர்வ கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தினர் வாக்கு செலுத்தினர். மொத்த வாக்குகள் 425, பதிவான வாக்குகள் 420, செல்லாதவை 5 இருந்தன. வாக்கு எண்ணிக்கையில் பாஸ்கரன் 259 வாக்குகளும், மகேந்திரன் 156 வாக்குகளும் பெற்றனர். சரியாக 103 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஸ்கரன் மீண்டும் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத் தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பணிக்குழுவின் சார்பில் அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.