திருப்புத்தூர், ஆக. 3: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளி மாணவர்கள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இப்பேரணியில், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் கருப்பையா (எ) கண்ணன், ரோட்டரி சங்க செயலாளர் சோமசுந்தரம் முன்னிலையில், கீழச்சிவல்பட்டி எஸ்ஐ ராஜ்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி விராமதி வளைவில் இருந்து தொடங்கப்பட்டு அப்பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கீழச்சிவல்பட்டி சிவன் கோயில் அருகே முடிக்கப்பட்டது. பள்ளி மாணவி இளவேனில் நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.பள்ளி முதல்வர் அர்ஷியா பாத்திமா நன்றி கூறினார்.