தேவதானப்பட்டி, ஜூலை 22: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(48). இவரது வீட்டு மராமத்து வேலைகளுக்கு தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பிச்சைபாண்டி என்பவர் வேலைகள் செய்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் இல்லாத சமயத்தில் பிச்சைபாண்டி, தர்மராஜ் வீட்டில் இருந்த ரூ. 10ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தர்மராஜ் புகாரில், தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து பிச்சைப்பாண்டியை கைது செய்தனர்.