ரெட்டிச்சாவடி, ஜூலை 10: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த கீழஅழிஞ்சப்பட்டு குளத்துமேட்டு தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் ஆரமுது (37). விவசாய வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து ஆரமுது தனது மோட்டார் சைக்கிளில் மனைவி குமுதா (26), மகன் ஹரிஷ் (5) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக கடலூர் செல்ல புதுச்சேரி – கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். ரெட்டிசாவடி காவல் நிலையம் அருகே வந்தபோது அவ்வழியாக பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஆரமுது ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆரமுது, அவரது மனைவி, மகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஆரமுது கொடுத்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்
37