மோகனூர், செப்.3: மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேலபேட்டபாளையத்தில் உள்ள முத்தாலம்மன், சந்தியப்பன், காளியம்மன் ேகாயிலில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வடிச்சோறு, காவிரியாற்றில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி பூங்கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனையடுத்து நேற்று காலை, திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.