மொடக்குறிச்சி, ஜூன் 4: மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் செம்மொழி நாள் முன்னிட்டு அரச்சலூர் அண்ணா நகரில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளரும், அரச்சலூர் பேரூராட்சி தலைவருமான விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் லோகநாதன், அரச்சலூர் பேரூர் செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அயலக அணி தலைவர் மதிவாணன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன் மற்றும் ஒன்றிய, பேரூர், இளைஞர் அணி, மாவட்ட, சார்பு அணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
0