மேல்மலையனூர், செப். 1: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை உண்டியலில் செலுத்துவர். அதன்படி பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்த காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரூ.90 லட்சத்து 98 ஆயிரத்து 985 ரொக்கமும், 148 கிராம் தங்க நகைகளும், 1150 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் மதியழகன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மேலாளர் மணி, காசாளர் சதீஷ், உண்டியல் கணக்கிடும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் வளத்தி காவல் நிலைய போலீசார் ஈடுபட்டனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ₹90 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் 148 கிராம் தங்கமும் இருந்தது
previous post