மேல்மலையனூர், ஜூன் 18: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த தாயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று மதியம் மேல்மலையனூர், வளத்தி சாலையில் உள்ள அடுப்பங்கரை என்ற உணவகத்தில் பீப் பிரியாணி வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பிரியாணியை திறந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் இருந்து கறியில் வெள்ளை நிற புழுக்கள் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அதனை பார்த்து சாப்பிட்டதை நிறுத்திவிட்டு உடனடியாக வாந்தி எடுத்த நிலையில் மேல்மலையனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மலையனூரில் பரபரப்பு உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் நெளிந்த புழுக்கள்
0
previous post