அருமனை,செப்.6: மேல்புறம் வடக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் இடைக்கோட்டில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் சையினி காட்டன் தலைமை வகித்தார். இடைக்கோடு பேரூர் செயலாளர் ஜெபக்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய தலைவர் சிவனேசன், துணைத் தலைவர் சந்திரன், பொருளாளர் றசலையன், வேத சிரோன்மணி, புலியூர் சாலை ஊராட்சி தலைவர் லிட்டில் பிளவர், மாவட்ட பிரதிநிதி குருபிரசாத், சந்திரபோஸ், ஏசுதாஸ், பளுகல் பேரூர் தலைவர் அருள் ஜார்ஜ், மாவட்ட அவைத் தலைவர் மரியசிசுகுமார், வீர வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், வரும் தேர்தலில் எவ்வித பாகுபாடும் இன்றி ஒற்றுமையோடு சம உரிமையை பேணிக்காக்க திமுக இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனிடமும் திமுக கொள்கையையும் சமத்துவ அரசியலையும் தெளிவுபடுத்தி கொடுக்க வேண்டிய ஒரு முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். மெத்தனம் இன்றி திமுக அரசியலுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும். என்று அமைச்சர் மனோ தங்கராஜ் திமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.