செய்யாறு: செய்யாறு அடுத்த மேல்நெமிலி அரசு பள்ளியில் கணித செயல்பாடுகளை மாணவிகள் வண்ணக்கோலங்களில் வரைந்து அசத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா, மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணித பாடத்தில் படைப்பாற்றல் திறன் வளர்க்கவும், கணிதமும், அறிவியலும் இணைந்த சிந்தனை திறன்களை உருவாக்கவும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மேற்பார்வையில், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் வண்ண, வண்ண கோல மாவில் கணித செயல்பாடுகளை 8ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் கடந்த வாரம் செய்திருந்தனர். அதேபோல், நேற்று முன்தினம், 7ம் வகுப்பு படிக்கும் 9 மாணவிகள் ஆர்வமுடன் வண்ணக்கோலங்களில் கணித செயல்பாடுகள் குறித்து வரைந்து அசத்தி, கணித பாடத்தை எளிதில் கற்றனர்….