மேலூர், ஜூன் 24: மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ஆனி மாத, தேய்பிறை சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நேற்று நடைபெற்றது.
சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்க நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன் திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.
.இந்நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி, பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் செய்திருந்தனர்.