திருவாரூர், ஆக.20: 2024-25ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வகுப்பு தொடக்க விழா திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா துவக்க விழாவினை குத்து விளக்கேற்றியும், மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கியும் தொடங்கி வைத்துப் பேசினார்.
இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் வினோத், துணை ப்பதிவாளர் (பயிற்சி) தினேஷ்குமார், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் சின்னசாமி, விரிவுரையாளர்கள் அப்பாராஜ், அசோக்குமார், நடராஜன், திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பிரியா, வளர்ச்சி அலுவலர் மாலா, மேலாளர் ராஜராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.