தஞ்சாவூர், பிப். 28: தஞ்சை அருகே மேலவழுத்தூரில் பழுதான குழாயை சீர்செய்து குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் பொதுமக்கள் அனுப்பி உள்ள மனுவில், தஞ்சாவூர் மாவட்டம் மேலவழுத்தூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஊராட்சி குடிநீர் மோட்டார் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லை. குறிப்பாக மேலத்தெரு, கீழத்தெரு, சின்னத்தெருக்களில் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக பழுதடைந்த குழாயை சீர் செய்து குடிநீர் வினியோகம் வழங்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலவழுத்தூர் குழாயில் விரிசல் குடிநீர் விநியோகம் இன்றி பொதுமக்கள் அவதி
0