பொன்னமராவதி, ஆக.22: பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் நாளை (23ம் தேதி) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கின்றது.பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் நாளை (23ம் தேதி) மேலத்தானியம் எஸ்ஏஆர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேலத்தானியம், ஓலியமங்களம், மரவாமதுரை, எம்.உசிலம்பட்டி,முள்ளிப்பட்டி, ஆலம்பட்டி,கீழத்தானியம், கொன்னையம்பட்டி ஆகிய 8 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட 8 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.