கடையநல்லூர், ஆக. 30: மேலக்கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில் வடக்கு தெருவில் உள்ள நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த 25ம்தேதி முதல் துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. நிகழ்ச்சியில் முதல் நாள் சுவாமிக்கு மாக்காப்பு, தீபாராதனை மற்றும் குழந்தைகள் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை கும்ப ஜெபம், அபிஷேகம் மற்றும் மாலை சிறப்பு பஜனைகள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மூன்றாம் நாள் உச்சவிருத்தி மற்றும் ராதா கல்யாணம் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். அன்று இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
மேலக்கடையநல்லூரில் கோகுலாஷ்டமி விழா
previous post