சேலம், ஜூன் 10: சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், அவசர செயற்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வகணபதி எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், 30 முதல் 40 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை நீரை திறந்து வைக்க வரும் முதல்வருக்கு, சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் இருந்து, மேட்டூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், எலிசபெத் ராணி, தேர்தல் குழு பார்வையாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், ெபாதுக்குழு உறுப்பினர்கள் ராமநாதன், தங்கமணி, சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர்கள் நிதின்சக்கரவர்த்தி, அர்த்தநாரி, பரமசிவம், நகர செயலாளர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்
0
previous post