பொன்னமராவதி, மார்ச் 27: பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர் ஊராட்சி மேமணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் இலாஹிஜான் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், ஊராட்சித் தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கிளாராமேரி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுநர்கள் நல்லநாகு, முகமது ஆசார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊர்பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மேலதாளத்துடன் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கினர். இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார்.
மேமணப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா
72