பாடாலூர், செப். 4: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேத்தால் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் இந்திராதேவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு குறித்து பேசினார். இதையடுத்து 2024-26 ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், தலைவராக பவளக்கொடி, துணைத்தலைவராக சுரேஷ் உள்பட மொத்தம் 24 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி, கல்பனா, அன்பழகன், சதீ ஷ்குமார், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.