திருவாரூர், ஆக. 26: 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டட ங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக வரும் ஜனவரி மாதம் (2025) 31ம் தேதி வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த தகவலை கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.