Monday, July 15, 2024
Home » மேட்டூரில் பிரபல ரவுடி கைது

மேட்டூரில் பிரபல ரவுடி கைது

by Suresh

சேலம், ஜூலை 8: மேட்டூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் விபிகே நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி இளங்கோ (47). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி இளங்கோ மீதான ஒரு வழக்கில் மேட்டூர் கீழமை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து இளங்கோ, மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு வழங்கப்படும்போது ரவுடி இளங்கோ, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அதனால், கடந்த மாதம் ரவுடி இளங்கோவை கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் மேட்டூர் போலீசார், ரவுடி இளங்கோவை தீவிரமாக தேடிவந்தனர். நேற்று அதிரடியாக இளங்கோவை கைது செய்தனர். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

two + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi