Monday, March 4, 2024
Home » மேட்டுப்பாளையம் அருகே சந்தனக்கட்டை கடத்திய 3 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம்

மேட்டுப்பாளையம் அருகே சந்தனக்கட்டை கடத்திய 3 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம்

by Ranjith

 

மேட்டுப்பாளையம், டிச.31: மேட்டுப்பாளையம் அருகே சந்தனக்கட்டை கடத்தியதாக 3 பேரை வனத்துறையினர் பிடித்து தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தீவிர விசாரணை நடத்தினர்.மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காவல் சுற்றுக்கு உட்பட்ட இரும்பறை பகுதியில் சந்தன கட்டை கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் வனச்சரகர் மனோஜூக்கு தகவல் வந்தது.

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ், வனவர்கள் சுரேந்திர நாத்,கோபிநாத், கோவிந்தசாமி அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரனூர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர்கள் மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (42), காரனூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (30), ஆலாங்குட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி (41) என்பதும், சட்டவிரோதமாக 2 கிலோ அளவிற்கு சந்தன மர வேர்க்கட்டைகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi