மேட்டுப்பாளையம்,செப்.14:மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர் காலனி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை,மான்,காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு,மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை வேடர் காலனி வாட்டர் பிளாண்ட் அருகே உள்ள பகுதிகளில் ஒற்றைக்காட்டு யானை நீண்ட நேரமாக அப்பகுதியில் உலாவந்தது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு காட்டு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்மாறு வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைய முயன்ற காட்டுயானை: பொதுமக்கள் பீதி
previous post