ஈரோடு: ஈரோடு அடுத்த மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திண்டல் மின்பாதையில் குடிநீர் வடிகால் வாரிய பணிகள் இன்று (17ம் தேதி) நடைபெற உள்ளது.
இதனால், கீழ் திண்டல், அம்மன் நகர், வித்யா நகர், சக்தி நகர், சாமுண்டி நகர், காமராஜ் நகர், செங்கோடம்பாளையம், சின்ன செங்கோடம்பாளையம், யாழ் நகர், ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், புஷ்பா நகர், கேஏஎஸ் நகர் 1, 2வது வீதிகளில் மேம்பாட்டு பணிகள் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், நாளை (18ம் தேதி) மேட்டுக்கடை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வில்லரசம்பட்டி மின்பாதையில் மேம்பாட்டு பணி நடப்பதால், சின்னமேடு, காரப்பாறை, மெடிக்கல் நகர், மாருதி நகர், புதுகாலனி ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.