விருதுநகர், நவ.22: மாயமான மெடிக்கல் ஷாப் பெண் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் அருகே சின்னப்பரெட்டியபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா, அருப்புக்கோட்டையில் மெடிக்கல் நடத்தி வருகிறார். தினசரி காலை ஊரில் இருந்து கிளம்பி சென்றால் இரவு 9 மணிக்கு கவிதா வீடு திரும்புவது வழக்கம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், பாலமுருகன் விருதுநகரில் இருந்து கொண்டு மனைவிக்கு போன் செய்து விருதுநகருக்கு துணி எடுக்க வரும்படி தெரிவித்துள்ளார். பஸ் ஏறி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த கவிதாவின் செல்போன் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அதன்பிறகு கவிதாவை பல இடங்களில் தேடியும் காணவில்லை. ஆமத்தூர் போலீசில் பாலமுருகன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடி வருகின்றனர்.