களக்காடு,ஆக.6: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான உட்கட்சி தேர்தல் நகர தலைவர் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட தலைவரும், தேர்தல் அதிகாரியுமான பீர்மஸ்தான் தேர்தலை நடத்தினர். பார்வையாளராக மாவட்ட தேர்தல் அதிகாரி முல்லை மஜீத் கலந்து கொண்டார்.
புதிதாக மூலைக்கரைப்பட்டி கிளையின் தலைவராக முஹம்மது ரஜப், துணை தலைவராக அப்துல் காதர், செயலாளராக சாகுல் ஹமீது, இணை செயலாளராக மகேந்திரன், பொருளாளராக இசக்கி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.