பொன்னை, பிப்.21: பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் வரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஏலவார்குழலி உடனுறை வரபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சிவராத்திரி வருவதற்கு சில நாட்களுக்கு முன் தொடர்ந்து மூன்று நாட்கள் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மூன்று வாயிற்படி வழியாக கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. சூரிய ஒளிக்கதிர் பொன்னிறமாகவும், சாம்பல் நிறமாகவும் விழுந்த அற்புத நிகழ்வை அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். மேலும் நேற்று சூரிய ஒளிக்கதிர் விழும் நிகழ்வையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வம் பொன்னை அருகே வரபுரீஸ்வரர் கோயிலில்
74