தாராபுரம், ஆக.20: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டம் மூலனூர் உட்கோட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் நடைபெற்ற கரையூர்-அத்தி மரத்துபுதூர் சாலை, புதுக்கோட்டை பிரிவிலிருந்து வெள்ளி நகர் வழியாக கம்பளியம்பட்டி செல்லும் சாலை, கிளாங்குண்டல்- மார்க்கம்பட்டி சாலை வழி சின்னமருதூர், மூலனூர்-சின்னிய கவுண்டன் வலசு சாலை வழி கிளாங்குண்டல், மூலக்கடை ஆகிய சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மற்றும் விரிவாக்க பணிகளை திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அதிகாரி சரவணன் ஆய்வு செய்தார்.
மேலும் இச்சாலைகளின் இருபுறங்களிலும் முட்புதர்களை அகற்றும் பணிகள், பாலங்கள் பராமரிப்பு பணி மற்றும் சாலை பாதுகாப்பு உபகரணங்களுக்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி தாராபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.