சேலம், ஆக.20: சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள எஸ்.நாட்டாமங்கலம் மாதேஸ்வரன்கரடு முனியப்பன்கோயில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி குள்ளம்மாள் (60). இவர், தனது வீட்டின் பீரோவில் ₹50 ஆயிரம் பணத்தை வைத்திருந்துள்ளார். அந்த பணம், கடந்த 12ம் தேதி இருந்துள்ளது. நேற்று முன்தினம் திரும்ப பார்த்தபோது, பீரோவில் இருந்த ₹50 ஆயிரம் பணத்தை காணவில்லை. வீட்டிற்கு வந்த மர்மநபர், அந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில், குள்ளம்மாள் புகார் செய்தார். சிறப்பு எஸ்ஐ பரமசிவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அதில், வீட்டிற்கு யாரேனும் உறவினர்கள் வந்துச் சென்றார்களா?, யார் மீதும் சந்தேகம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, ₹50 ஆயிரம் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி வீட்டில் ₹50 ஆயிரம் திருட்டு
previous post