திருச்சி, மே 31: ரங்கத்தில் குடும்ப தகராறில் மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி ரங்கம், சத்தம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி(72). இந்த நிலையில் பிப்.28ம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற விஜயலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ரங்கம் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்