தொண்டி, நவ.21: தொண்டி அருகே ஓரியூரில் கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல கூடாது என கூறி கலை கொத்தியல் வெட்டியதால் பரபரப்பு. தொண்டி அருகே ஒரியூரை சேர்ந்தவர் நாச்சரம்மாள்(65). இவரை அவரது மகன் மூனீஸ்வரன், கடந்த 2020ம் வருடம் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார். இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகளாக கெங்கேஸ்வரி, மாரிமுத்து, மகாலிங்கம், ராஜேஸ்குமார் உள்ளனர்.
இவர்களை கடந்த வருடம் சாட்சி சொல்ல கூடாது என மீரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கெங்கேஸ்வரியை, முனீஸ்வரன் மனைவி ராமு மிரட்டி வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கெங்கேஸ்வரி திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.